search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் திமுக தொண்டர்"

    கருணாநிதி மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் சேலத்தில் திமுக தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    சேலம்:

    சேலம் 4-வது டிவிசனுக்கு உட்பட்ட தென் அழகாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 45). தி.மு.க. தொண்டர்.

    இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து சோகத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சீனிவாசன் அழகாபுரம் பஸ் நிறுத்தத்தில் கருணாநிதியின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே நடந்து சென்றார்.

    அப்போது வீட்டின் முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு மணி என்ற மனைவியும் பார்த்திபன், தேவேந்திரன் என்ற மகன்களும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×